Monday, December 30, 2013

என்ன சொல்லி விழுகிறது மழை

கார் மேகம் கொண்டு 
சூழுவேன் !

காள மேகம் கொண்டு 
பாடுவேன் !
இன்னல் விலக 
மின்னல் போல் 
வருவேன் !
ஜன்னல் ஓரம் 
மழை  சாரல் 
செய்வேன் !
துளி,துளியாய்  - விழுந்து 
துயர் துடைப்பேன் !

அலை ,அலையாய் - எழுந்து
மீண்டும் 
உயிர் பிறப்பேன் !

என்னுயிர்  தோழன் 
உழவனல்லவா !!
பிறர் பசியை போக்கும் 
புனிதனல்லவா !!
என்னுயிர் தந்து 
நட்புயிர் காப்பேன் !
இருவரும் இணைந்து
மண்ணுயிர் காப்போம் !!
(என  சொல்லி  விழுகிறது மழை !!)



புத்தாண்டு வாழ்த்துகள் -2014

அன்பாய் வந்தாய் !
அனைவரின் இல்லங்களிலும்
நுழைந்தாய் !

உன் பிறந்த நாளெனும்
புத்துணர்ச்சி கொடுத்தாய் !
பொங்கலெனும் புத்தாடை
கொடுத்தாய் !
ரமலான்  எனும் மனித
நேயத்தை கொடுத்தாய் !
தீபாவளி எனும் சிரிப்பை
கொடுத்தாய் !
கிறிஸ்து  எனும் புனிதத்தை
கொடுத்தாய் !

அனைத்து சந்தோசத்தையும்
கொடுத்த உனக்கு
விடை கொடுக்க - மனமில்லை !
வருபவனை வரவேற்க - தடையில்லை !

ஆதலால்
அன்புடன் சென்றுவா !
உன் நண்பனை வரவேற்க !
Good Bye - 2013
Welcome -  2014

Happy New Year - 2014

Thursday, October 31, 2013

தீபாவளி வாழ்த்துகள் - 2013

வீடுகளில்
தீப ஒளி ஏற்றுங்கள்
அரக்கன் எனும் இருள் - மறைந்து
வெளிச்சமாக மாறட்டும்  !!


களிப்புடன்  கொண்டாடுங்கள்
இனிப்புடன் நட்பை வழங்கி
சுவையுங்கள்
உறவுகள் பலம் பெறட்டும்  !!

புத்தாடை உடுத்துங்கள்
புதுமையான எண்ணங்கள்
பிறக்கட்டும் !!

இன்பம் வேண்டும்
துன்பம் வேண்டாம் !!
இறையன்பு வேண்டும்
இறைச்சல் வேண்டாம் !!
காற்று வேண்டும்
துர்நாற்றம் வேண்டாம் !

நம் வீடு சுத்தம் வேண்டும்
அதுபோல் மண்டலத்தில் உள்ள
பசுமை வீடு சுத்தம் வேண்டுமல்லவா
ஆதலால்

வெடிகளை தவிர்ப்போம் !!
மாசுபடுதலை குறைப்போம்  !!
நம் சந்ததிகள் வாழ !!







Monday, September 30, 2013

பேருந்து பயணம்


பேருந்தில்  பயணம்
கன்னியர்களுக்கு  கவனம் !!
வளையம்  போட்டு பாடுறான்
வளைக்க உன்ன பார்க்குறான்
உசாரு!!  உசாரு !!
படியில் தொங்கி  பார்க்கிறான்
உன் மனசை படிக்க பார்க்கிறான்
உசாரு  -எம்மா
 உசாரு !!
இவனுங்க
கல்லூரி  போவதே
கன்னியரைக்  காணத்தான் !!
பாசாங்கு பண்ணுவான்
படிப்பாளி போலத்தான் !!
தானா  ஆடுவான் !
கானா  பாடுவான் !
போலீஸ் வந்தாலே
தரை இறங்கி ஓடுவான் !
உசாரு - பாப்பா
உசாரு !

Sunday, September 29, 2013

நட்பின் பரிசு

நட்புக்கு - இலக்கணம் உண்டு !
தலைகணம் -இல்லை !

வெகுமானத்தை பெற்றுத்தருவதோ - நட்பு
அவமானத்தை பெற்றுத்தருவதோ -பிறரின் உறவுகள் ,

பிரியா - விடை கொடுத்தாலும்
பிரியாவிடை கொடுப்பது
நம் நட்பு !

வீடு வரை- மனைவி
காடுவரை - பிள்ளை
கடைசிவரை ( யாரோ ) - இல்லை
கடைசிவரை வரும் - நட்பு !

Wednesday, September 18, 2013

நாடாளுமன்ற தேர்தல்- 2014

யாருக்கு உங்கள் ஓட்டு ?
மதம் என்ற  ( போ )பார்வைக்குள்  பா .ஜ .க !!
மதவாதம் என்று சொல்லியே காங்கிரஸ் !!
தமிழ்  வாழ்க என்று  தி.மு.க !!
ஈழம் வெல்க  என்று ம.தி.மு.க !!
குடும்ப அரசியல் வேண்டாம் என்று அ .தி .மு .க !!
ஜாதி அரசியல்  பா.ம .க ,வி .சி .க !!
சந்தர்ப்பங்களை  தேடும் தே.மு.தி.க !!
ஊழல் ஒழிய வேண்டும்  என்று  "ஆம் ஆத்மி " !!
யாருக்கு உங்கள் ஓட்டு?

Friday, September 13, 2013

ட்ராபிக்

தவறான பாதையில் வந்த
ஓட்டுநருக்கும் ,
கடமை தவறாத  ட்ராபிக்
காவலருக்கும் ,
கைகலப்பு !
இக்கைகலப்பில்  ஓட்டுனரே,
வென்றார் !
அப்பாதையில் சென்றார் !
காசு இடம் மாறியது !
கடமை தடம் மாறியது !
இருபது ரூபாய்
இந்திய ட்ராபிக் விதியை
மீறியது !
ஆம்
பஞ்சமே இருந்தாலும்
லஞ்சம் குறையாது
நம் நாட்டில் !

Wednesday, September 11, 2013

கூவம் ஆறு

அழகிய ஆறு  அன்றோ !!
அழுகிய  சேறு  இன்றோ !!
கூவம் ஆறு  என்றோ !!

காணா நீரு
கலக்குது கழிவு நீரு
பானா காத்தாடி
பறக்குது  பாரு !!

கரைதானே சிறுவனின்
விளையாட்டரங்கம் !!
கடல்தானே கூவம்
கூடலரங்கம் !!

Saturday, September 7, 2013

தேன்மொழி


நீ -ஒரு தமிழெழுத்து  -என்
வாழ்வை நிர்ணயிக்கும்
தலையெழுத்து !

நீயே என் மூச்சு  -எனும்
மூன்றெழுத்து !

உன்னுள்ளே பதிந்திருக்கும்
தமிழெழுத்து !!
ஆம்

உன் முகவாட்டம்  ஓர் உயிரெழுத்து  -அதில்
ஒளிந்திருக்கும் சில எழுத்து !!

சிரிப்பு  வந்தால்  'அ ' என்கிறாய் !
சிலிர்ப்பு  வந்தால் 'இ' என்கிறாய் !
'ஒ' என்ற  எழுத்து தமிழில்  - ஒன்று
உன்னுள்ளே பதிர்ந்திருப்பதோ - இரண்டு !
அதுவே ,
ஒலியைக்  கேட்க்கும்  காது !!

முகத்தில் உயிரெழுத்து மட்டுமா
இருக்கிறது !!
என் உயிரை எடுக்கும் ஆயுதமல்லவா
இருக்கிறது !!
அது எது !!
உன் அழகான சிறகுகள்  விரித்த
உந்தன் இரு விழிகள் !!

உனை  வர்ணிக்க  வார்த்தைகள்
கொட்டிக்கிடக்கிறது -உன்னில்

நீயே எடுத்துக்கொள்
எனை வாழ்க்கையில்-சேர்த்துகொள் !!



 


Friday, September 6, 2013

காதல் கவிதை


உள்ளதை சொல்லிடவா - என்
உள்ளத்தை அள்ளிடவா !

தீப்பொறி பட்டால்தான்
மெழுகு கூட உருகும்  - உன்
பார்வை பட்டாலே - என்
மேனி என்றும் இளகும் !!

கபடம் இல்லா மனதில்
கலவரம் செய்துவிட்டு - செல்லாதே !
கலவரம் செய்தாலும் பரவாயில்லை
உனை காணாமல்
எனை கொல்லாதே !

மெழுகு  சிலைபோன்றவளே
உனைக்  கண்டால் - நான்
சிலையாகிறேன் !!

என் வாழ்வில்  அரசியாக - நான்
விலையாகிறேன் !!

என் வாழ்வில் வந்துவிடு !
என்  வாழ்க்கையை தந்துவிடு

Friday, August 30, 2013

விநாயகர் சதுர்த்தி - 2013

முப்பத்து முக்கோடி
தேவர்களுக்கெல்லாம்
முதல்வனே !

சிவனின்
புதல்வனே !

யானை முகம் கொண்ட
ஆதவனே !

தம்பிக்கு துணை நின்ற
தூயவனே !

சமய யோசனையால்
ஞான பழத்தை வென்றெடுத்த
நாயகனே !

இசையின் நாதமே !
உன்  தும்பிக்கையே
எங்கள் வாழ்வின்
நம்பிக்கை !

வாழ்க இறைவா !

சுதந்திரம் - 2013

                    சுதந்திரம்!
                    சுதந்திரம்!

                    அடைந்துவிட்டோம்
                    சுதந்திரம்!

                    வந்தே மாதரம்
                    என்று சொல்லியே
                    பெற்றுவிட்டோம்
                    சுதந்திரம்!
                       
                   வந்தே மாதரம்
                   இது  இந்தியர்களின்
                   தாரக மந்திரம்!
              
                   கொல்லையர்களிடமும்
                   வெள்ளையர்களிடமும்
                   போராடி பெற்ற
                   சுதந்திரம் !

                   செந்நீர்  வடித்து -பலர்
                   கண்ணீர்  வடித்து  -பெற்ற
                   சுதந்திரம் !

                   தாய் மண்ணை  - காக்க
                   வெள்ளையர்களிடம்
                   போராடி  - தன்
                   தாயின்மணிக்கொடியை
                   உயர்த்தியே   மாண்ட
                   தமிழர் அல்லவா !
                   அவரே திருப்பூர்
                   குமரனல்லவா !

                    குண்டர்களிடமும் !
                    குண்டுகளிடமும்
                    மாண்டு  பெற்ற
                    சுதந்திரமல்லவா !

                   சுதந்திரம்  என்பது
                   நாம்  முன்னோடியாக - வாழ
                   நம்  முன்னோர்கள்
                   செய்த  உயிர்  -  தியாகமல்லவா !
                   சுதந்திரம்
                   நம் உயிர் மூச்சல்லவா !
               
வந்தே மாதரம் !  வந்தே மாதரம் !  வந்தே மாதரம் !



                  
                   

Thursday, August 8, 2013

இரமலான் வாழ்த்துகள்


வட்ட வடிவமான இவ் வுலகத்தில்
முக்கோணமாய் மூன்று மதங்கள் இருந்தாலும்
மனங்கள் ஒன்றுதான் - ஆதலால்
சதுரமாய் ,
சமமாய் நிற்போம் !!
சகோதரதுவமாய் வசிப்போம் !!
சமத்துவமாய் வாழ்வோம் !!
-------------------இரமலான்  வாழ்த்துகள்

Thursday, July 4, 2013

பாசம்

பசி - பாசம் அறியாது !
(தாய்) பாசம் -பசி அறியாது !!
அதுதான்
தாய் !!

Friday, March 29, 2013

தன்னால் ஈழம் மலரும் !!

என்னால் ஈழம் மலருமா?
உன்னால் ஈழம் மலருமா?
இல்லை
தன்னால் ஈழம் மலரும்!!

தன்னுயிர் தந்த தமிழனால்
ஈழம் மலரும் !!
பார்ட்டி(அரசியல் ) கனைகளை  விடுத்து
போட்டி கனைகளை  தொடுத்து !!
தரையில்  இறங்கி  வா - தமிழா !!
தன்னால்  ஈழம் மலரும் !!

இந்திய விடுதலையில் முக்கிய
பங்காற்றிய  தமிழா !!
தமிழனுக்காக  தரையில் இறங்கி
போராட வா - தமிழா !!
தன்னால் ஈழம் மலரும்!!

கடைசி தமிழன் மூச்சு
உள்ளவரை போராட வா !!
தன்னால் ஈழம் மலரும் !!