உள்ளதை சொல்லிடவா - என்
உள்ளத்தை அள்ளிடவா !
தீப்பொறி பட்டால்தான்
மெழுகு கூட உருகும் - உன்
பார்வை பட்டாலே - என்
மேனி என்றும் இளகும் !!
கபடம் இல்லா மனதில்
கலவரம் செய்துவிட்டு - செல்லாதே !
கலவரம் செய்தாலும் பரவாயில்லை
உனை காணாமல்
எனை கொல்லாதே !
மெழுகு சிலைபோன்றவளே
உனைக் கண்டால் - நான்
சிலையாகிறேன் !!
என் வாழ்வில் அரசியாக - நான்
விலையாகிறேன் !!
என் வாழ்வில் வந்துவிடு !
என் வாழ்க்கையை தந்துவிடு
No comments:
Post a Comment