நீ -ஒரு தமிழெழுத்து -என்
வாழ்வை நிர்ணயிக்கும்
தலையெழுத்து !
நீயே என் மூச்சு -எனும்
மூன்றெழுத்து !
உன்னுள்ளே பதிந்திருக்கும்
தமிழெழுத்து !!
ஆம்
உன் முகவாட்டம் ஓர் உயிரெழுத்து -அதில்
ஒளிந்திருக்கும் சில எழுத்து !!
சிரிப்பு வந்தால் 'அ ' என்கிறாய் !
சிலிர்ப்பு வந்தால் 'இ' என்கிறாய் !
'ஒ' என்ற எழுத்து தமிழில் - ஒன்று
உன்னுள்ளே பதிர்ந்திருப்பதோ - இரண்டு !
அதுவே ,
ஒலியைக் கேட்க்கும் காது !!
முகத்தில் உயிரெழுத்து மட்டுமா
இருக்கிறது !!
என் உயிரை எடுக்கும் ஆயுதமல்லவா
இருக்கிறது !!
அது எது !!
உன் அழகான சிறகுகள் விரித்த
உந்தன் இரு விழிகள் !!
உனை வர்ணிக்க வார்த்தைகள்
கொட்டிக்கிடக்கிறது -உன்னில்
நீயே எடுத்துக்கொள்
எனை வாழ்க்கையில்-சேர்த்துகொள் !!
No comments:
Post a Comment