Tuesday, June 8, 2021

இசையின் வேதம்

இசையின் வேதம்!!
ஓதும் நாதம்!!
உன் இசையால்
களையும் சோகம்!!
உன் இசையால்
அடங்கும் தாகம்!!
இசையின் இராஜா
அவர்களுக்கு பிறந்தநாள்
வாழ்த்துகள்...
#Happybirthdayilayarajasir

உபதேசியுங்கள்

 உபதேசித்து வாழாதீர்கள்..

    வாழ்க்கையை அனுபவித்து

உபதேசியுங்கள்...

பிறர்க்கு பயன்படும்...


நான் #கொரோனா தடுப்பூசி

போட்டுக்கொண்டேன்

நண்பர்களே..

நீங்களும்  போட்டுக்கொண்டு

பயன்பெறுங்கள்....

Thursday, December 6, 2018

அழகிய நிலா

கெஞ்சினாலும் கிடைக்காத
 அந்நிலா !!
 கொஞ்ச சொல்லி கேட்கிறது
 விண்ணிலா!
 தேன் நிலா
 எந்நிலா...


Wednesday, April 18, 2018

துரோகத்தில் முளைத்த காதல்


காகித பூ என்று
புரியாமல்
முகர்ந்துவிட்டேன் !!

கானல் நீர் என்று
அறியாமல்
நீந்திவிட்டேன் !!

சிநேகதி என்று
நினைத்து
snake உடன்
பழகிவிட்டேன் !!

கனவிலும் காண விரும்பவில்லை !!
வெறுப்பதிலும் விருப்பம் தேவையில்லை !!
துரோகத்தில் வீழா
காலத்திற்கு நன்றி !!











Wednesday, February 1, 2017

திருமண வாழ்த்துக்கள் -2017

ஒளி வீசும் பட்டாம்பூச்சியாக !!
உன் வாழ்வில் வந்த
வான்மதியாய் ,
வெண்மதி !!
வாழ்க வளமுடன் !!
வளர்க நலமுடன் !!


Wednesday, December 7, 2016

காகிதம்

நான்  காகிதம் பேசுகிறேன் !!
வெற்றிடம்  போக்க -
பெண்-மை வேண்டும்!!

J.J அம்மா வின் இறப்பு!! - நெஞ்சில் கனகனத்தது நெருப்பு !!

J.J அம்மா  - கண்ணீர் அஞ்சலி
********************************
தமிழ் நாட்டின் நலனுக்காக
ஓங்கி ஒலித்த ஒலி
மரணித்துவிட்டது !!
இருண்ட தமிழகத்தை
வெளிச்சத்திற்கு கொண்டுவந்த
ஒளி விளக்கு
அனைந்துவிட்டது !!
துணிச்சலான வீர மங்கையை
தமிழகம்
இழந்துவிட்டது !!

போராட்ட  குணம் படைத்த
அம்மா !!
நீங்கள் இல்லாத நாடு இனி
சும்மா !!

அம்மா  CM-ன்  ஆத்மா இறைவனடி சேர பிராத்திக்கிறேன் !!

Friday, April 22, 2016

May 16 - Election 2016

என் நாடு - என் சுதந்திரம் !!

என் ஓட்டு - என் உரிமை !!

தன்மானம் விடுபவன் அல்ல !!

என் ஓட்டு விற்பனைக்கு  அல்ல !!

வாழ்க  ஜன நாயகம் !! - வளர்க பாரதம் !!

Sunday, April 17, 2016

அன்னையின் கதறல்

எழுந்து வா - மகனே !!
எழுந்து வா !!
பாலூட்டி ,சீராட்டி
செல்வமாய்  நீ வளர்ந்த ,
ஒருவனாய் நீ இருக்க !
செங்கரும்பாய் நான் வளர்த்த !!
மெத்த படிப்பு படித்து
மேதாவியாய் ஆக
அனுப்பி வைத்தேனே அன்று !!
மேலாவியாய் ஆகிவிட்டான் என்று
அனுப்பி வைத்தான் ஓலை -காலன்
இன்று !!

மண்ணில் கை பட்டாலே !
வெள்ளம் கொண்டு  நான் கழுவ !
செந்நீரில் மிதக்கிறாயே !
எதைக் கொண்டு நான் கழுவ ?
பொய்யான  சேதியாய் இருக்கவேண்டுமென
மனம் பதைக்க !!
உண்மை என்றவுடன் ,
மனம் பதறுதடா.. !!
இதயம் துடிதுடிக்க ,
இரத்தம் உறையுதடா.. !!
பொய்யென கூறிட
எழுந்து வா - என் செல்வமே !
எழுந்து வா !!
மெத்த படிப்பு வேண்டாம் !
மேதாவியாக வேண்டாம் !
அன்னை மடியில் படுத்துறங்க
எழுந்து வா - என் மகனே !
எழுந்து வா !!

Monday, March 14, 2016

கல்லூரி

அரும்பு மீசை -துளிர்விடும் !
குறும்பு பார்வை -வெளிவரும் !
கரும்பு போல இனிக்கும் - நட்பு
காவியம் மறையா  - காதல் !!
குருதி போல நனையும் - நம்
நினையும் நாட்கள் !!
கல்லூரி ....

ஒழுக்கம் கற்பிக்கும் - கோயில் !
மேதாவிகளை செதுக்கும் -பல்லவபுரம் !!
நட்பு பயிலும் -  நூலகம் !
சுற்றி திரியும் - பூகோளம் !!

Wednesday, February 17, 2016

வாழ்த்துகிறோம்.....

செடியில் பூத்த - வண்ணப்பூ
கொடியில்  பூத்த - செல்லப்பூ
பெரியோர்களால் கோர்த்த
மலர்மாலை!
இன்று
மணமாலையாய்!!
 நீங்கள்...
நல்மனதோடும்,
நறுமணத்தோடும் ,
வாழ வாழ்த்துகிறோம் !!

வாழ்த்து மடல்

அன்பெனும் வீட்டில்
பண்புகளை புகுத்தி
பாசத்தை - நிரப்பி
சுவாசம் எனும் கூட்டில்
உயிரோட்டமாய் வாழ!!
வாழ்த்துகிறோம் ....


Monday, February 8, 2016

காதலர் தின வாழ்த்துகள் ..2016

உன்னோடு சிலகாலம் !!
உன் நினைவுகளோடு பலகாலம் !!
உயிர்வாழ்வேன்!!
உனக்காக ..

Monday, January 25, 2016

திருமண வாழ்த்து

கரு விழிபோல் - காண வேண்டும் !!
கண்  இமைபோல் - காக்க வேண்டும் !!
மனைமாட்சி - சிறக்க வேண்டும் !!
சான்றோர்கள் - போற்ற வேண்டும் !!


--   வாழ்க வளமுடன்....

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் --2016

கடந்த பாதையை திரும்பி பார்ப்போம் !!
நல்  பாதையில் எதிர்நோக்கி
நடப்போம் !!
நடப்பதை  விரும்பி ஏற்போம் !!

   --ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்  --2016

Monday, July 27, 2015

நல்ல மனிதரை இழந்து விட்டது இந்தியா

தரணி போற்றும்
தலைமகனே!
விண்ணில் சென்ற
விண்வெளி நாயகரே !
அணுவை சோதனையில் வெற்றிகண்ட
எங்களின் கடவுளே !
ஆம் !
அவனின்று ஓர் அணுவும்
அசையாது !!
உலகத்தை உற்று பார்க்க வைத்த
விஞ்ஞானமே !
எங்களின் மெய்ஞானமே!!
பிறந்த நாட்டிற்கும்
வகித்த பதவிக்கும்
புகழாரம் சூடிய
மாமனிதா !
உறங்கி கொண்டிருக்கும்
எங்களின் உற்சாகமே!
நாட்டின் நலமே
தன்னலம் என்று கருதிய
தன்னலமற்ற ஜீவியே !!
நீர் இயற்கை அடைந்து விட்டாய்
செய்தியறிந்து
இயற்கை அழுகின்றது !!
மலர் உன் பாதம் தொடுகின்றது !!
உருவாகாத உயிர்களின் மீதும்
அக்கறை கொண்டு போதித்த
புத்தரே !!
வாழ்வின் அர்த்தமே !!
இனம் ,மொழி மதம் பாராமல்
எங்களை ஒரு கோட்டில்
நிற்கவைத்த - எங்களின்
ஒருமைப்பாடே !!
உரையாடலின் போதே
உயிர் பிரிந்து சென்ற
இலக்கணமே !!
அணுவை ஆக்கவோ ,அழிக்கவோ
முடியாது என்று ஜான் டால்டன்
கூறியது போலில்லாமல் !!
நீர் உருவாக்கிய மாணவ அணு
ஆக்க முடியும் ,
ஆனால்
அழிக்கமுடியாது!!
காற்றில் கலந்து விட்டது
எங்களின் உயிர் மூச்சு !!
இயற்கை உள்ளவரை
உங்களின்
ஆன்மா ,
விண்ணுக்கும் ,மண்ணுக்கும்
பயணிக்கும்,

Monday, April 13, 2015

தமிழர் திருநாள் வாழ்த்துகள்-2015

சித்திரை ஒன்று !!
தமிழர் திருநாள்' !!
ஆட்சி மாறினால்
தை' திருநாள்! - தமிழர்' திருநாள் !
ஆம்
ஆதவன் உதித்தால்
தை ஒன்று !
இலை செழித்தால்
சித்திரை ஒன்று !
கோடைக்காலமாய்
பொலக்குது வெய்யில் !!
மாட்டிக்கொண்டோம்
இவர்களுக்கைய்யில் !!
என்று மாறுமோ
இருவரின் போட்டி !!
என்று மலருமோ
வசந்த காலமாய் நல்லாட்சி !!
              --  தமிழர் திருநாள் வாழ்த்துகள் --

Tuesday, February 17, 2015

காதல் - பரிணாம வளர்ச்சி கொண்ட ஆன்மா!!

காதல்
ஒரு பரிணாம  வளர்ச்சி கொண்ட ஆன்மா !!
அனைத்து கிரகங்கள்
சுழலும் வரை
இக்காதல் சுழலும் !!

தட்டி பறிப்பதில் இல்லை - காதல் !!
தானா பூப்பதுதான் - காதல் !!

தவிக்க விடுவதில் இல்லை - காதல்!!
நொடி பொழுதாகிலும்
உன் நினைப்பால் தவித்து விடுவது -காதல் !!

விட்டு பிடிப்பதில் இல்லை  - காதல்
விட்டு கொடுப்பது தான் - காதல்

பிரிந்திருப்பதில் இல்லை  - காதல்!
உன் நினைப்பால் மீண்டும் ,மீண்டும்
பிறந்துகொண்டே  இருப்பது - காதல் !!

நினைத்துகொண்டே இருப்பதில்  இல்லை - காதல்!
உன் வாழ்வு சிறக்க
உன் நினைப்பை இழந்துவிடுவதும் - காதல் !!

உன் பிரிவால்
மனம் பிரேதலிப்பதில் இல்லை - காதல் !!
மறுதலிப்பதுதான் -காதல் !!

உன்  பிரிவால்
இறப்பதில் இல்லை  - காதல் !!
வலி கொண்ட இதயத்தால்
வாழ்ந்துகாட்டுவது - காதல் !!

பிறந்த  காதல்
என்றும் இறப்பது இல்லை !!
யாரும் மறுப்பதற்கில்லை !!

Friday, December 5, 2014

சாதி- நீதி

படிப்பில்லாமல்
இருந்தது - சாதி
படித்தபிறகும்
ஏனடா (சாதியை )
கட்டி அழுகிறாய்  - நீதி
எப்படி சொல்கிறாய்
உனக்கு நீ உயர்ந்தவன் என்றும் !
மற்றவன் தாழ்ந்தவன் என்றும் !
சாதியில் இல்லை
உன் உயர்வு !
நல் பாதையை தேடு
நாம் சமம் என்று கூறு !!
நான் கூறுகிறேன்  நீ உயர்ந்தவன்
என்று !!
சாதி எனும் சாக்கடையை
ஏன் இன்னும் ,மூக்கை
பிடித்துகொண்டு
முகர்கிறாய் !!

“எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’
                                                                                                        - Dr.Ambethkar

Monday, July 7, 2014

இனம்

கொழும்பு
என்கிறார்  ஒருவர் -புரியாமல்
கொழம்புகிறான் நம் -தமிழன் !
இடைமறித்தேன்
இனமென்று !
புரிந்துகொண்டேன்  -ஈழமென்று !
அறிந்துகொண்டேன் -பச்சை தமிழென்று !!
நலம் விசாரித்தேன் -அவரிடம்
புரிந்துகொண்டேன்,
வாயை மூடினால்
வாழ்க்கை நடத்தலாமென்று !
என்னடா உலகம் இது?
இடம் பெயர்ந்தவன் ஆளுகிறான் !!
ஆண்டவன் -அலைகிறான் !!

M.G.R Lines ..
(ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் விளங்கட்டுமே !!
வரும் காலத்திலே நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என்று விளங்கட்டுமே !!)