எழுந்து வா - மகனே !!
எழுந்து வா !!
பாலூட்டி ,சீராட்டி
செல்வமாய் நீ வளர்ந்த ,
ஒருவனாய் நீ இருக்க !
செங்கரும்பாய் நான் வளர்த்த !!
மெத்த படிப்பு படித்து
மேதாவியாய் ஆக
அனுப்பி வைத்தேனே அன்று !!
மேலாவியாய் ஆகிவிட்டான் என்று
அனுப்பி வைத்தான் ஓலை -காலன்
இன்று !!
மண்ணில் கை பட்டாலே !
வெள்ளம் கொண்டு நான் கழுவ !
செந்நீரில் மிதக்கிறாயே !
எதைக் கொண்டு நான் கழுவ ?
பொய்யான சேதியாய் இருக்கவேண்டுமென
மனம் பதைக்க !!
உண்மை என்றவுடன் ,
மனம் பதறுதடா.. !!
இதயம் துடிதுடிக்க ,
இரத்தம் உறையுதடா.. !!
பொய்யென கூறிட
எழுந்து வா - என் செல்வமே !
எழுந்து வா !!
மெத்த படிப்பு வேண்டாம் !
மேதாவியாக வேண்டாம் !
அன்னை மடியில் படுத்துறங்க
எழுந்து வா - என் மகனே !
எழுந்து வா !!
No comments:
Post a Comment