Friday, December 5, 2014

சாதி- நீதி

படிப்பில்லாமல்
இருந்தது - சாதி
படித்தபிறகும்
ஏனடா (சாதியை )
கட்டி அழுகிறாய்  - நீதி
எப்படி சொல்கிறாய்
உனக்கு நீ உயர்ந்தவன் என்றும் !
மற்றவன் தாழ்ந்தவன் என்றும் !
சாதியில் இல்லை
உன் உயர்வு !
நல் பாதையை தேடு
நாம் சமம் என்று கூறு !!
நான் கூறுகிறேன்  நீ உயர்ந்தவன்
என்று !!
சாதி எனும் சாக்கடையை
ஏன் இன்னும் ,மூக்கை
பிடித்துகொண்டு
முகர்கிறாய் !!

“எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’
                                                                                                        - Dr.Ambethkar

No comments: