Tuesday, February 17, 2015

காதல் - பரிணாம வளர்ச்சி கொண்ட ஆன்மா!!

காதல்
ஒரு பரிணாம  வளர்ச்சி கொண்ட ஆன்மா !!
அனைத்து கிரகங்கள்
சுழலும் வரை
இக்காதல் சுழலும் !!

தட்டி பறிப்பதில் இல்லை - காதல் !!
தானா பூப்பதுதான் - காதல் !!

தவிக்க விடுவதில் இல்லை - காதல்!!
நொடி பொழுதாகிலும்
உன் நினைப்பால் தவித்து விடுவது -காதல் !!

விட்டு பிடிப்பதில் இல்லை  - காதல்
விட்டு கொடுப்பது தான் - காதல்

பிரிந்திருப்பதில் இல்லை  - காதல்!
உன் நினைப்பால் மீண்டும் ,மீண்டும்
பிறந்துகொண்டே  இருப்பது - காதல் !!

நினைத்துகொண்டே இருப்பதில்  இல்லை - காதல்!
உன் வாழ்வு சிறக்க
உன் நினைப்பை இழந்துவிடுவதும் - காதல் !!

உன் பிரிவால்
மனம் பிரேதலிப்பதில் இல்லை - காதல் !!
மறுதலிப்பதுதான் -காதல் !!

உன்  பிரிவால்
இறப்பதில் இல்லை  - காதல் !!
வலி கொண்ட இதயத்தால்
வாழ்ந்துகாட்டுவது - காதல் !!

பிறந்த  காதல்
என்றும் இறப்பது இல்லை !!
யாரும் மறுப்பதற்கில்லை !!

No comments: