Monday, September 30, 2013

பேருந்து பயணம்


பேருந்தில்  பயணம்
கன்னியர்களுக்கு  கவனம் !!
வளையம்  போட்டு பாடுறான்
வளைக்க உன்ன பார்க்குறான்
உசாரு!!  உசாரு !!
படியில் தொங்கி  பார்க்கிறான்
உன் மனசை படிக்க பார்க்கிறான்
உசாரு  -எம்மா
 உசாரு !!
இவனுங்க
கல்லூரி  போவதே
கன்னியரைக்  காணத்தான் !!
பாசாங்கு பண்ணுவான்
படிப்பாளி போலத்தான் !!
தானா  ஆடுவான் !
கானா  பாடுவான் !
போலீஸ் வந்தாலே
தரை இறங்கி ஓடுவான் !
உசாரு - பாப்பா
உசாரு !

Sunday, September 29, 2013

நட்பின் பரிசு

நட்புக்கு - இலக்கணம் உண்டு !
தலைகணம் -இல்லை !

வெகுமானத்தை பெற்றுத்தருவதோ - நட்பு
அவமானத்தை பெற்றுத்தருவதோ -பிறரின் உறவுகள் ,

பிரியா - விடை கொடுத்தாலும்
பிரியாவிடை கொடுப்பது
நம் நட்பு !

வீடு வரை- மனைவி
காடுவரை - பிள்ளை
கடைசிவரை ( யாரோ ) - இல்லை
கடைசிவரை வரும் - நட்பு !

Wednesday, September 18, 2013

நாடாளுமன்ற தேர்தல்- 2014

யாருக்கு உங்கள் ஓட்டு ?
மதம் என்ற  ( போ )பார்வைக்குள்  பா .ஜ .க !!
மதவாதம் என்று சொல்லியே காங்கிரஸ் !!
தமிழ்  வாழ்க என்று  தி.மு.க !!
ஈழம் வெல்க  என்று ம.தி.மு.க !!
குடும்ப அரசியல் வேண்டாம் என்று அ .தி .மு .க !!
ஜாதி அரசியல்  பா.ம .க ,வி .சி .க !!
சந்தர்ப்பங்களை  தேடும் தே.மு.தி.க !!
ஊழல் ஒழிய வேண்டும்  என்று  "ஆம் ஆத்மி " !!
யாருக்கு உங்கள் ஓட்டு?

Friday, September 13, 2013

ட்ராபிக்

தவறான பாதையில் வந்த
ஓட்டுநருக்கும் ,
கடமை தவறாத  ட்ராபிக்
காவலருக்கும் ,
கைகலப்பு !
இக்கைகலப்பில்  ஓட்டுனரே,
வென்றார் !
அப்பாதையில் சென்றார் !
காசு இடம் மாறியது !
கடமை தடம் மாறியது !
இருபது ரூபாய்
இந்திய ட்ராபிக் விதியை
மீறியது !
ஆம்
பஞ்சமே இருந்தாலும்
லஞ்சம் குறையாது
நம் நாட்டில் !

Wednesday, September 11, 2013

கூவம் ஆறு

அழகிய ஆறு  அன்றோ !!
அழுகிய  சேறு  இன்றோ !!
கூவம் ஆறு  என்றோ !!

காணா நீரு
கலக்குது கழிவு நீரு
பானா காத்தாடி
பறக்குது  பாரு !!

கரைதானே சிறுவனின்
விளையாட்டரங்கம் !!
கடல்தானே கூவம்
கூடலரங்கம் !!

Saturday, September 7, 2013

தேன்மொழி


நீ -ஒரு தமிழெழுத்து  -என்
வாழ்வை நிர்ணயிக்கும்
தலையெழுத்து !

நீயே என் மூச்சு  -எனும்
மூன்றெழுத்து !

உன்னுள்ளே பதிந்திருக்கும்
தமிழெழுத்து !!
ஆம்

உன் முகவாட்டம்  ஓர் உயிரெழுத்து  -அதில்
ஒளிந்திருக்கும் சில எழுத்து !!

சிரிப்பு  வந்தால்  'அ ' என்கிறாய் !
சிலிர்ப்பு  வந்தால் 'இ' என்கிறாய் !
'ஒ' என்ற  எழுத்து தமிழில்  - ஒன்று
உன்னுள்ளே பதிர்ந்திருப்பதோ - இரண்டு !
அதுவே ,
ஒலியைக்  கேட்க்கும்  காது !!

முகத்தில் உயிரெழுத்து மட்டுமா
இருக்கிறது !!
என் உயிரை எடுக்கும் ஆயுதமல்லவா
இருக்கிறது !!
அது எது !!
உன் அழகான சிறகுகள்  விரித்த
உந்தன் இரு விழிகள் !!

உனை  வர்ணிக்க  வார்த்தைகள்
கொட்டிக்கிடக்கிறது -உன்னில்

நீயே எடுத்துக்கொள்
எனை வாழ்க்கையில்-சேர்த்துகொள் !!



 


Friday, September 6, 2013

காதல் கவிதை


உள்ளதை சொல்லிடவா - என்
உள்ளத்தை அள்ளிடவா !

தீப்பொறி பட்டால்தான்
மெழுகு கூட உருகும்  - உன்
பார்வை பட்டாலே - என்
மேனி என்றும் இளகும் !!

கபடம் இல்லா மனதில்
கலவரம் செய்துவிட்டு - செல்லாதே !
கலவரம் செய்தாலும் பரவாயில்லை
உனை காணாமல்
எனை கொல்லாதே !

மெழுகு  சிலைபோன்றவளே
உனைக்  கண்டால் - நான்
சிலையாகிறேன் !!

என் வாழ்வில்  அரசியாக - நான்
விலையாகிறேன் !!

என் வாழ்வில் வந்துவிடு !
என்  வாழ்க்கையை தந்துவிடு