Saturday, November 8, 2008

பெண்களே எது அழகு!

"பெண்களே
எது அழகு!

பண்பாட்டை மீறி
நாகரீகம் என்று
அ-நாகரிமாக -குறைவான
ஆடை அணிகிறாயே
அதுவா அழகு!

பண்பாட்டுடன்
கரைபடியாத- நிறைவான
ஆடை அணிகிறார்களே
அதுவல்லவா அழகு!

ஆதலால்-கூறுங்கள்
பெண்களே
எது அழகு!

கற்-காலத்திலே
ஆடையில்லா-காலத்திலே
தன் -மானத்தைக் காப்பற்ற
இலை -எடுத்து
உடலை -மறைத்து
(தன்)-மானத்தோடு -வாழ்ந்தார்கள்
அன்றோ!

ஆனால் இன்றோ!
நாகரீகம் என்ற- போர்வையில்
மக்களின் -பார்வையில்
விலை -கொடுத்து
குறை-ஆடை உடுத்தி
(தன்)-மானத்தை-இழக்கிறார்களே!
இதுவா - அழகு!

ஆதலால்-கூறுங்கள்
பெண்களே
எது அழகு!

தாரமாக,தாயாக,மாற்றான் தாயாக-இவ்வாறு
உயர்ந்த நிலையில் உள்ளவர்களும்- நீங்களே!

ஆதலால்
அரை-குறையைப் பற்றி
நிறைவாக கூற-விரும்பவில்லை
எனில்,
மார்க் ட்வின் கூறியதுபோல
"பெண்களே உஙகளை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்"!

1 comment:

abulhassan said...

Super Super po!! Engeyo poitteeeeenga