Thursday, January 2, 2014

பிரபஞ்ச காதல்

ஓர  விழிகொண்டு  தாக்குகிறாய் !
மௌன விழிகொண்டு பேசுகிறாய் !

ஊமை விழிகொண்டு  கிழித்த
என் இதயத்தில்
உயிரோட்டமாய் குருதி நனையுதடி !!

என் மனவாட்டம்  இரவில்
உன் நினைவால் சுருதி  இசைக்குதடி !!

காதல் வயப்பட்ட என் இதயம்
நண்பனின் தங்கை என்றதும்
தயங்குதடி !!

இச்சையில்லா நம் காதல் -என்றதும்
உன் நினைவால்
இதயம் துடிக்குதடி !!

உன் மௌன வினாவுக்கு
என் வாய்மொழி விடை
கொடுத்ததடி !!

விடை கொடுத்த பிறகு
என் இதய பெட்டிக்குள்
மடலை எடுக்க ஏனடி
மறுக்கிறாய்  - பவி !

நானே உன் வாழ்வில் வந்த
முதல்  பாவி !!

"கட்டினால்      --பவி
 இல்லையேல்
கட்டுவேன்     --காவி "

No comments: