Thursday, April 30, 2009

காதலின் சித்து!! -கடைசியில் பித்து!!

உன்னை பார்ப்பதற்க்கு முன்
எல்லோரும் கூறினார்கள்
சிறந்த வைத்தியக்காரன் என்று !

உன்னை பார்த்த பிறகு
எல்லோரும் கூறினார்கள்
உன்னால் ஆக்கப்பட்ட
பைத்தியக்காரன் என்று !

Tuesday, April 14, 2009

நினைவின் பரிசு

எந்தன் நினைவு உந்தன் விரல்களிலே!
உந்தன் நினைவு எந்தன் வரிகளிலே !

Thursday, April 9, 2009

கலைஞனுக்கு சிலை வைத்த "கலைஞர்"

"முதல்வர் சொன்ன -கவிதை!
மு-புதல்வர் சொன்ன கவிதை!

புறநானூற்று கவிதை
மூச்சு விடாமல் சொன்னது-அவர்!
எனக்கு மூச்சு வாங்கியது ஒன்- ஹவர்,

இந்த வயதிலே இவ்வளவு-துடிப்பு
என்றால்,
சொல்லவா வேண்டும்-இளம் வயதில்!

" சிவாஜிக்கு சிலை வைத்ததால்தான்
சிறந்தவர் இல்லை - நீங்கள்
சிறந்தவர் என்பதால்தான்
சிலை வைத்தாய்!


" நடிப்பிலே சிறந்து விளங்கிய
சிவாஜிக்கு -அடைமொழி
நடிகர்த்திலகம்-உண்மையென்றால்!

நீங்கள் நட்பின் திலகமே!

"மாதா,பிதா,குரு,தெய்வம்
என்பது -முன்மொழி

மாதா,பிதா,குரு,நட்பு,தெய்வம்
என்பது -உன்மொழி

பரபிரம்மம் படைத்ததும் - நீங்களே
இப்பரலோகத்தின் பிரம்மமும் -நீங்களே!

Tuesday, April 7, 2009

வரன் வருவதைக் கண்டு -வாடுது இந்த வண்டு!

"மொட்டுகளுக்குள் அவளின் -நினைவுகள்
பார்க்க துடித்தேன் வண்டாக!

வண்டு வருவதைக் -கண்டு
முகம் காட்டி சிரித்தது - செண்டு

காற்று இசைத்த இசைக்கு-ரீங்காரமாய்
பாடினேன்,
ஆடினாள் -ஒய்யாரமாய்!

இதழ் விரித்தாள் இனிப்பு கொடுத்தாள்
இனிப்பாக சென்றன சில நாட்கள்....................

விலை பேச வந்தவனிடம் விலை பேசினான்
தோட்ருவித்தவன்!
விலை போவாளா என்னவள்?
------"வரன் வருவதைக் கண்டு -வாடுது இந்த வண்டு!"-------