Thursday, August 27, 2009

இதழ் சாயம் - இதயம் காயம்

உன்
உதட்டில் பூசிய சாயம் !
என்
உள்ளதை காயப்படுத்துகிறது
இந்த சாயம்
என்னை
மாயபடுத்துவதற்க்கா!
இல்லை
காயபடுத்துவதற்க்கா?

Saturday, August 1, 2009

நட்பு

நட்புக்கு இலக்கணம் -உண்டு
தலைக்கணம் -இல்லை !

வெகுமாணம் பெற்றுத்தருவது - நட்பு
அவமானத்தை தருவது - சிலரின் உறவுகள் !

பிரியா - விடை கொடுத்தாலும்
பிரியாவிடை கொடுப்பது -நட்பு

வீடு வரை மனைவி
காடுவரை பிள்ளை
கடைசிவரை -(யாரோ) நட்பு

Thursday, April 30, 2009

காதலின் சித்து!! -கடைசியில் பித்து!!

உன்னை பார்ப்பதற்க்கு முன்
எல்லோரும் கூறினார்கள்
சிறந்த வைத்தியக்காரன் என்று !

உன்னை பார்த்த பிறகு
எல்லோரும் கூறினார்கள்
உன்னால் ஆக்கப்பட்ட
பைத்தியக்காரன் என்று !

Tuesday, April 14, 2009

நினைவின் பரிசு

எந்தன் நினைவு உந்தன் விரல்களிலே!
உந்தன் நினைவு எந்தன் வரிகளிலே !

Thursday, April 9, 2009

கலைஞனுக்கு சிலை வைத்த "கலைஞர்"

"முதல்வர் சொன்ன -கவிதை!
மு-புதல்வர் சொன்ன கவிதை!

புறநானூற்று கவிதை
மூச்சு விடாமல் சொன்னது-அவர்!
எனக்கு மூச்சு வாங்கியது ஒன்- ஹவர்,

இந்த வயதிலே இவ்வளவு-துடிப்பு
என்றால்,
சொல்லவா வேண்டும்-இளம் வயதில்!

" சிவாஜிக்கு சிலை வைத்ததால்தான்
சிறந்தவர் இல்லை - நீங்கள்
சிறந்தவர் என்பதால்தான்
சிலை வைத்தாய்!


" நடிப்பிலே சிறந்து விளங்கிய
சிவாஜிக்கு -அடைமொழி
நடிகர்த்திலகம்-உண்மையென்றால்!

நீங்கள் நட்பின் திலகமே!

"மாதா,பிதா,குரு,தெய்வம்
என்பது -முன்மொழி

மாதா,பிதா,குரு,நட்பு,தெய்வம்
என்பது -உன்மொழி

பரபிரம்மம் படைத்ததும் - நீங்களே
இப்பரலோகத்தின் பிரம்மமும் -நீங்களே!