Monday, July 7, 2014

இனம்

கொழும்பு
என்கிறார்  ஒருவர் -புரியாமல்
கொழம்புகிறான் நம் -தமிழன் !
இடைமறித்தேன்
இனமென்று !
புரிந்துகொண்டேன்  -ஈழமென்று !
அறிந்துகொண்டேன் -பச்சை தமிழென்று !!
நலம் விசாரித்தேன் -அவரிடம்
புரிந்துகொண்டேன்,
வாயை மூடினால்
வாழ்க்கை நடத்தலாமென்று !
என்னடா உலகம் இது?
இடம் பெயர்ந்தவன் ஆளுகிறான் !!
ஆண்டவன் -அலைகிறான் !!

M.G.R Lines ..
(ஓர் ஆயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் விளங்கட்டுமே !!
வரும் காலத்திலே நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என்று விளங்கட்டுமே !!)






Tuesday, June 24, 2014

நித்திரையில் - சிந்தனை

நித்திரையில்   - சிந்தனை !!
யாருக்கும் செய்யவில்லை - நிந்தனை !!
மனமில்லை என்று நினைக்கும்
உறவுகளால்  வேதனை !!
கடன் பட்டார் நெஞ்சம் கலங்குவது போல
இங்கே கலங்கிகொண்டிருக்கிறது
என் மனம் !!
அவர்களின் எதிர்பார்ப்பு நியாயம் தான் !!
என் முயற்சியின் வேகம் அநியாயம் தான் !!
தேங்கிகொன்டிருக்கிறது என் முன்னேற்றம் !!
தூங்கிக்கொண்டிருக்கிறது என் முயற்சி !!
பிறக்கும் பொழுது எதையும் கொண்டு வரவில்லை !!
போகும் பொழுது எதையும் கொண்டு செல்வதில்லை !!
ஆனால்
இடைப்பட்ட காலத்தில் யாருக்கும் சுமையாக இல்லாமல்
சுமை தாங்கியாக இருக்க விரும்புகிறேன் !!

ஏமாற்றம் எண்ணம் என்னில் இல்லை !!
ஏமாறவும் இனி தயாராக இல்லை !!

மீளுவேன் இந்த தேக்கத்தில் இருந்து
மேலே வருவேன் இந்த தாக்கத்தை வைத்து !!


Monday, May 5, 2014

தேர்தல் முடிவு (Election Result )- 2014

ஆட்சியை பிடித்தது பா.ஜ.க
தமிழகத்தை பிடித்தது அ .தி .மு .க
தமிழகத்தில் தளர்ந்தது தி.மு.க

Tuesday, January 28, 2014

தேர்தல் களம் - 2014

கறை  படிந்த "கை "
நாட்டை கறையாக்கிவிட்டது !!

கறை  துடைக்க
வாருங்கள் அனைவரும்
வேட்டையாட !!

தேர்தல் களத்திற்கு
போவோம் ஓட்டு  போட !!



Monday, January 6, 2014

பொங்கல் நல்வாழ்த்துகள் - 2014

பொங்கல்  நல்வாழ்த்துகள் - 2014