Thursday, October 31, 2013

தீபாவளி வாழ்த்துகள் - 2013

வீடுகளில்
தீப ஒளி ஏற்றுங்கள்
அரக்கன் எனும் இருள் - மறைந்து
வெளிச்சமாக மாறட்டும்  !!


களிப்புடன்  கொண்டாடுங்கள்
இனிப்புடன் நட்பை வழங்கி
சுவையுங்கள்
உறவுகள் பலம் பெறட்டும்  !!

புத்தாடை உடுத்துங்கள்
புதுமையான எண்ணங்கள்
பிறக்கட்டும் !!

இன்பம் வேண்டும்
துன்பம் வேண்டாம் !!
இறையன்பு வேண்டும்
இறைச்சல் வேண்டாம் !!
காற்று வேண்டும்
துர்நாற்றம் வேண்டாம் !

நம் வீடு சுத்தம் வேண்டும்
அதுபோல் மண்டலத்தில் உள்ள
பசுமை வீடு சுத்தம் வேண்டுமல்லவா
ஆதலால்

வெடிகளை தவிர்ப்போம் !!
மாசுபடுதலை குறைப்போம்  !!
நம் சந்ததிகள் வாழ !!







Monday, September 30, 2013

பேருந்து பயணம்


பேருந்தில்  பயணம்
கன்னியர்களுக்கு  கவனம் !!
வளையம்  போட்டு பாடுறான்
வளைக்க உன்ன பார்க்குறான்
உசாரு!!  உசாரு !!
படியில் தொங்கி  பார்க்கிறான்
உன் மனசை படிக்க பார்க்கிறான்
உசாரு  -எம்மா
 உசாரு !!
இவனுங்க
கல்லூரி  போவதே
கன்னியரைக்  காணத்தான் !!
பாசாங்கு பண்ணுவான்
படிப்பாளி போலத்தான் !!
தானா  ஆடுவான் !
கானா  பாடுவான் !
போலீஸ் வந்தாலே
தரை இறங்கி ஓடுவான் !
உசாரு - பாப்பா
உசாரு !

Sunday, September 29, 2013

நட்பின் பரிசு

நட்புக்கு - இலக்கணம் உண்டு !
தலைகணம் -இல்லை !

வெகுமானத்தை பெற்றுத்தருவதோ - நட்பு
அவமானத்தை பெற்றுத்தருவதோ -பிறரின் உறவுகள் ,

பிரியா - விடை கொடுத்தாலும்
பிரியாவிடை கொடுப்பது
நம் நட்பு !

வீடு வரை- மனைவி
காடுவரை - பிள்ளை
கடைசிவரை ( யாரோ ) - இல்லை
கடைசிவரை வரும் - நட்பு !

Wednesday, September 18, 2013

நாடாளுமன்ற தேர்தல்- 2014

யாருக்கு உங்கள் ஓட்டு ?
மதம் என்ற  ( போ )பார்வைக்குள்  பா .ஜ .க !!
மதவாதம் என்று சொல்லியே காங்கிரஸ் !!
தமிழ்  வாழ்க என்று  தி.மு.க !!
ஈழம் வெல்க  என்று ம.தி.மு.க !!
குடும்ப அரசியல் வேண்டாம் என்று அ .தி .மு .க !!
ஜாதி அரசியல்  பா.ம .க ,வி .சி .க !!
சந்தர்ப்பங்களை  தேடும் தே.மு.தி.க !!
ஊழல் ஒழிய வேண்டும்  என்று  "ஆம் ஆத்மி " !!
யாருக்கு உங்கள் ஓட்டு?

Friday, September 13, 2013

ட்ராபிக்

தவறான பாதையில் வந்த
ஓட்டுநருக்கும் ,
கடமை தவறாத  ட்ராபிக்
காவலருக்கும் ,
கைகலப்பு !
இக்கைகலப்பில்  ஓட்டுனரே,
வென்றார் !
அப்பாதையில் சென்றார் !
காசு இடம் மாறியது !
கடமை தடம் மாறியது !
இருபது ரூபாய்
இந்திய ட்ராபிக் விதியை
மீறியது !
ஆம்
பஞ்சமே இருந்தாலும்
லஞ்சம் குறையாது
நம் நாட்டில் !