கார் மேகம் கொண்டு
சூழுவேன் !
காள மேகம் கொண்டு
பாடுவேன் !
இன்னல் விலக
மின்னல் போல்
வருவேன் !
ஜன்னல் ஓரம்
மழை சாரல்
செய்வேன் !
துளி,துளியாய் - விழுந்து
துயர் துடைப்பேன் !
அலை ,அலையாய் - எழுந்து
மீண்டும்
உயிர் பிறப்பேன் !
என்னுயிர் தோழன்
உழவனல்லவா !!
பிறர் பசியை போக்கும்
புனிதனல்லவா !!
என்னுயிர் தந்து
நட்புயிர் காப்பேன் !
இருவரும் இணைந்து
மண்ணுயிர் காப்போம் !!
(என சொல்லி விழுகிறது மழை !!)