Monday, July 27, 2015

நல்ல மனிதரை இழந்து விட்டது இந்தியா

தரணி போற்றும்
தலைமகனே!
விண்ணில் சென்ற
விண்வெளி நாயகரே !
அணுவை சோதனையில் வெற்றிகண்ட
எங்களின் கடவுளே !
ஆம் !
அவனின்று ஓர் அணுவும்
அசையாது !!
உலகத்தை உற்று பார்க்க வைத்த
விஞ்ஞானமே !
எங்களின் மெய்ஞானமே!!
பிறந்த நாட்டிற்கும்
வகித்த பதவிக்கும்
புகழாரம் சூடிய
மாமனிதா !
உறங்கி கொண்டிருக்கும்
எங்களின் உற்சாகமே!
நாட்டின் நலமே
தன்னலம் என்று கருதிய
தன்னலமற்ற ஜீவியே !!
நீர் இயற்கை அடைந்து விட்டாய்
செய்தியறிந்து
இயற்கை அழுகின்றது !!
மலர் உன் பாதம் தொடுகின்றது !!
உருவாகாத உயிர்களின் மீதும்
அக்கறை கொண்டு போதித்த
புத்தரே !!
வாழ்வின் அர்த்தமே !!
இனம் ,மொழி மதம் பாராமல்
எங்களை ஒரு கோட்டில்
நிற்கவைத்த - எங்களின்
ஒருமைப்பாடே !!
உரையாடலின் போதே
உயிர் பிரிந்து சென்ற
இலக்கணமே !!
அணுவை ஆக்கவோ ,அழிக்கவோ
முடியாது என்று ஜான் டால்டன்
கூறியது போலில்லாமல் !!
நீர் உருவாக்கிய மாணவ அணு
ஆக்க முடியும் ,
ஆனால்
அழிக்கமுடியாது!!
காற்றில் கலந்து விட்டது
எங்களின் உயிர் மூச்சு !!
இயற்கை உள்ளவரை
உங்களின்
ஆன்மா ,
விண்ணுக்கும் ,மண்ணுக்கும்
பயணிக்கும்,