Tuesday, June 24, 2014

நித்திரையில் - சிந்தனை

நித்திரையில்   - சிந்தனை !!
யாருக்கும் செய்யவில்லை - நிந்தனை !!
மனமில்லை என்று நினைக்கும்
உறவுகளால்  வேதனை !!
கடன் பட்டார் நெஞ்சம் கலங்குவது போல
இங்கே கலங்கிகொண்டிருக்கிறது
என் மனம் !!
அவர்களின் எதிர்பார்ப்பு நியாயம் தான் !!
என் முயற்சியின் வேகம் அநியாயம் தான் !!
தேங்கிகொன்டிருக்கிறது என் முன்னேற்றம் !!
தூங்கிக்கொண்டிருக்கிறது என் முயற்சி !!
பிறக்கும் பொழுது எதையும் கொண்டு வரவில்லை !!
போகும் பொழுது எதையும் கொண்டு செல்வதில்லை !!
ஆனால்
இடைப்பட்ட காலத்தில் யாருக்கும் சுமையாக இல்லாமல்
சுமை தாங்கியாக இருக்க விரும்புகிறேன் !!

ஏமாற்றம் எண்ணம் என்னில் இல்லை !!
ஏமாறவும் இனி தயாராக இல்லை !!

மீளுவேன் இந்த தேக்கத்தில் இருந்து
மேலே வருவேன் இந்த தாக்கத்தை வைத்து !!