வீடுகளில்
தீப ஒளி ஏற்றுங்கள்அரக்கன் எனும் இருள் - மறைந்து
வெளிச்சமாக மாறட்டும் !!
களிப்புடன் கொண்டாடுங்கள்
இனிப்புடன் நட்பை வழங்கி
சுவையுங்கள்
உறவுகள் பலம் பெறட்டும் !!
புத்தாடை உடுத்துங்கள்
புதுமையான எண்ணங்கள்
பிறக்கட்டும் !!
இன்பம் வேண்டும்
துன்பம் வேண்டாம் !!
இறையன்பு வேண்டும்
இறைச்சல் வேண்டாம் !!
காற்று வேண்டும்
துர்நாற்றம் வேண்டாம் !
நம் வீடு சுத்தம் வேண்டும்
அதுபோல் மண்டலத்தில் உள்ள
பசுமை வீடு சுத்தம் வேண்டுமல்லவா
ஆதலால்
வெடிகளை தவிர்ப்போம் !!
மாசுபடுதலை குறைப்போம் !!
நம் சந்ததிகள் வாழ !!