Saturday, January 3, 2009

இனிய புத்தாண்டு நல் வாழ்த்து்கள் !!!(2009)

வருடம் ,வருடம்
பிறக்கிறது புத்தாண்டு
பொதுமறையாக!

வருடம் ,வருடம்
கொண்டாடுகிறோம்
புதுமுறையாக!

வருடத்தில்
அன்று மட்டும்தான்
கொண்டாடுகிறோம்!

ஆண்டு முழுவதும்
திண்டாடுகிறோம்!

புத்தாண்டு பேரிலே
கள்ளுச்சாராயம்- தழைக்கிறது
நம் கலாச்சாரமோ -அழிகிறது!

புத்தாண்டு அழுகுரலுடன்
பிறந்ததது!-நாம்
வாழ்வில் சிறப்பதற்க்காகத்
தானே தவிர-நாம்
அழுவதற்க்கும்,
அழிவதற்க்கும்,
இல்லை!

ஆதலால்
இப்புத்தாண்டிலே
இனியாவது -மாறுவோம்!!
இனிமையாக -மாறுவோம்!!
போதையை மாற்றுவோம்!!
நம்
பாதையை மாற்றுவோம்!!
புதுமையாய் வாழ்வோம்!!
புன்னகையுடன் வாழ்வோம்!!
இப்புத்தாண்டிலே!!!!.